P – 97

நெடுஞ்சாலை
இணைப்புத் திட்டம்

நாடெங்கும் விளம்பரம்
நாளிதழ் தம்பட்டம்

இட்ட அடி நோக
அடுத்த அடி கொப்பளிக்க

குண்டு குழி ரோட்டில்
குடு குடு மூதாட்டி

          – அப்துல் கையூம்

P – 98

பழுதடைந்த
மனித ஊர்தியின்
தலைமேட்டில்

ஏனிந்த
மைல் கல்..?

ஓஹோ ..
ஓடிய காலத்து
மைலேஜு கணக்கோ..?

          – அப்துல் கையூம்

P – 99

இந்தியன் நீ ..
இந்தியனாக இரு

படிச்சு படிச்சு சொன்னேன்

காதிலே வளையம்
கையிலே காப்பு

கழுத்திலே தொங்கும்
கனத்த சங்கிலி

சப்பாத்தி கள்ளியாய்
சாயம் பூசிய கேசம்

அடக் கருமமே ..
அப்பாச்சி இந்தியனாம்

          – அப்துல் கையூம்

P – 103

பல்லி ஒன்று
பலன் சொன்னது

மேற்கே பார்த்தது
கிழக்கே பார்த்தது

கூரை மேலிருந்தே
குறி சொன்னது

சற்றே நொடியில்
சறுக்கி விழுந்தது

ஆருட மேதையின்
அரை வால் போனது

அதற்கு வரும்
ஆபத்தை அறியாமலே ..

          – அப்துல் கையூம்

P – 105

சுமைதாங்கி கல்
என் பெற்றோர்கள்

மைல் கற்கள்
என் ஆசிரியர்கள்

வாழ்க்கையில்
வழவழப்பான
கூழாங் கற்கள்
என் நண்பர்கள்

கண்ணே ..
உன்னை
ராசிக்கல் என்றேன்

நீ இட்டதோ
என் தலையில்
பாறாங்கள்

          – அப்துல் கையூம்

P-107

எச்சில் நெசவு
உமிழ்நீர் கோலம்
கச்சிதப் பின்னல்
பூச்சிப் பொறி
பாழ்மனைத் தோரணம்
பாபிலோன் தொங்கு தோட்டம்
அதிசய நுட்பம்

கஜினிக்கே
பாடம் தந்த
சிலந்தி வலை   

          – அப்துல் கையூம்  

                                                                                               

P – 108

p-108.jpg 

எழுந்ததும்                                             எழாததுமாய்                                                                     

உச்சந் தலையில்                                                          கொண்டை போட்டு                                                            

குலுக்கி மினுக்கி                                                             குனிந்து நிமிர்ந்து 

கெண்டை ஏற                                                              தொண்டை கிழிய                                                                 

மச்சு மீது                                                                         உச்ச ஸ்தாயியில்                                                          

அப்படியென்ன ஒரு                                                           காட்டுக் கத்தல்?                                                             

நடையைப் பார் .. ..  

கதிரவனை எழுப்பிய                                                             கர்வ மிடுக்கோ?           

          – அப்துல் கையூம் 

P – 109

bharathi.jpg 

பாரதியே ..                                                     பார்த்தாயா..?                                                            பைந்தமிழில் உன்                                                            பாடலை படித்துவிட்டு                                             பாட்டெழுதுகிறானாம் 

“காணி நிலம் வேண்டாம்                                                        காணி நிலம் வேண்டாம்                                                            

என் காதலியின்                                                   தலையணையில்                                                                   கால் துண்டு                                                                               இடம் எனக்கு                                                                 போதும் காளி ..” என்று

          – அப்துல் கையூம்

P – 112

p-112.jpg 

ஆகாயத்தில்

அன்ன விரயம்

வெள்ளித் தட்டை

வீசியெறிந்து

விண் முற்றம் முழுதும்

வெண் சோற்றுப்

பருக்கைகள்

ஓ விண்மீன்கள் ..

          – அப்துல் கையூம்

P – 113

p-113.jpg 

நறநற பற்கள்                                            

காவல் தெய்வம்                                                                       

பேண்ட் ஜிப்

          – அப்துல் கையூம்

P-114

 
 

தேன் நிலவு .. ..

தாம்பத்ய முகவுரை

இளமை சமர்ப்பணம்

காதற் பதிப்பு

கவர்ச்சி முகப்பு

அணிந்துரை இல்லா

கையடக்கப் பிரதி

அவள் … …

திறந்த புத்தகம்

இவன் … …

புத்தகப் புழு

          – அப்துல் கையூம்

P – 115

கலியுகம் .. ..

கழுத்திலே                                                                                                                        பெயர்

நினைவாற்றல்                                                                                                           கம்மி ?

          – அப்துல் கையூம்

P – 117

p-117.jpg 
நெற்றிப் பட்டம்
பட்டுக் குஞ்சம்
பொன்னாடை போர்த்தி
மணி அலங்காரம்
          வேளா வேளைக்கு
          கவளச் சோறு
ஏ .. அங்குசக்காரா !
          திக்குத் தெரியாத காட்டில்
          தேடித் தேடி தினம்
          அம்மணமாய் ஓடி
          அலைந்து திரிந்தேனே
          அது எவ்வளவோ மேல்.
கயிறு பிளிறியது
காலிலே பாவம்
கனத்த சங்கிலி
          – அப்துல் கையூம்

P – 118

p-118.jpg 
எந்தப் புகைப்படச்சுருளை
இரவு பகல்
கழுவுகிறார்கள்
          இந்த
          நிழற்படக்
          கலைஞர்கள் ?
இருட்டறைக்குள்
துறு துறுவென்று
கருத்த வெளவாள்கள் .. ..
          அப்துல் கையூம்

P-121

p-121.jpg 
தேடலே வாழ்க்கை
வாழ்க்கையே தேடல்
          ஒரு சீதையின் தேடல்
          இராமாயாணம் ..
ஒரு சிலம்பின் தேடல்
சிலப்பதிகாரம் ..
          ஒரு கணையாழியின் தேடல்
          சாகுந்தலம்
ஆதி மனிதன்
கல்லைத் தேடி
வேட்டையாடினான்
          இன்று மனிதன்
          நிலவில் சென்று
          கல்லைத் தேடினான்
தேடலில்லா வாழ்க்கை
தேறாத வாழ்க்கை
          நேற்றைய தேடல்
          இன்றைய சொகுசு
இன்றைய தேடல்
நாளைய சேமிப்பு 
          – அப்துல் கையூம்

P – 123

செல்லரிக்கா ஏடுகளில்
பல்லவனார் வடித்த
சொல்லவொணா
சிற்பக் கவிதை
மகிமை சேர்
மாமல்லபுரம்
அது கடலோரக்
கற்காவியம்
          – அப்துல் கையூம்

P – 125

p-125.jpg 
அடித்ததோ
பேய்க்காற்று
          தலை விரித்து
          சாமி ஆடிய
பனை மரத்து
பாவைக்கு
          மரமேறி
          மந்திரித்து
இறுக்கமாய்
தாயத்து
           கழுத்திலே
          கள்ளுப் பானை
– அப்துல் கையூம்

P – 127

p-127.jpg 
சீ..ச்..சீ
டெய்லரா அவன்..?
          சட்டைப்பை இல்லாமல்
          சட்டையா..?
சண்டையிட
கிளம்பினேன்.
          போகட்டும் கழுதை ..
இருந்தால் மட்டும்
என்னதான் வாழுதாம் ..? 
          அப்துல் கையூம்

P – 129

தேசிய நீரோட்டம்
பேசியே களைத்தோம்
          நதிகளுக்கு ஏன்
          நாட்டாமை ..?
காவிரிக்கு போதும்
கட்டப் பஞ்சாயத்து
          தஞ்சைத் தரணியில்
          தவமாய்த் தவமிருந்து
நம்பியே அதனை
கும்பி காய்பவனும்
          இந்தியப் பிரஜைதான்
          இந்தியனே ..
அப்துல் கையூம்

P – 130

p-130.jpg 
கணினி
          அறிவியலின்
          வளர்ப்புப் பிள்ளை
எடுப்பார்
கைப்பிள்ளை
          இனி இவனில்லாமல்
          எதுவும் இல்லை
அப்துல் கையூம்

P-131

p-131.jpg 
இருட்டறைக்குள்
ஏன் முடக்கம் ..?
          உனக்கு
          பால்குடி
          பருவத்திலிருந்தே
பயத்தை ஊட்டி வளர்த்த
பெற்றோர்கள் யார்..?
          பதில் சொல்
          வெளவாலே ..
அப்துல் கையூம்

P – 132

p-132.jpg 
தேசப்பிதாவே ..
தீர்க்கதரிசி நீ ..!
          கையில் .. ..
          குச்சியை ஏந்திய
          சிதம்பர ரகசியம்
சிலையானபின்தான்
சிந்தையில் படுகிறது
          பட்சிகள் பறந்தன
          எச்சமிட அச்சம்
அப்துல் கையூம்

P – 133

வீணைக் கச்சேரி
          விரக்தியில்
          வெளியேறும்
          ரசிகர் கூட்டம்
நரம்புத் தளர்ச்சி
          வீணைக்கா ?
          வித்வானுக்கா ?
விவரம்
தெரியவில்லை
          அப்துல் கையூம்

P – 137

கேள்விக்குறிகளே ..!
          ஒற்றைக் காலில்
          ஏனிந்த வேள்வி..?
வினாக்களின் பாரத்தில்
வில்லாய் வளைந்தீரோ..?
          குனிந்து தேடுவது
          விடைகளையா..?
வினாக்களுக்கேது
முற்றுப் புள்ளி ..?
          அதைத்தான்
          போட்டு மிதித்து
          ஏறி நின்று விட்டீரே..?
அப்துல் கையூம்