வரவேற்பறையில் ஒரு
கண்ணாடி கல்லறை
வட்டமிட்டு வளையவரும்
வண்ண வண்ண மீனினம்
சிறைப்பிடித்து பார்ப்பதில்
சின்ன சின்ன சந்தோஷம்
நாளொரு மேனியாய்
விரிந்துக்கொண்டே போகும்
பரந்த பிரபஞ்சம்
பிரபஞ்சத்தை விரிவாக்கும்
பேரிறைவன்
உயிரினங்களின்
உலகத்தை
ஓரிரு அடிகளில் சுருக்கி
உவகையுறும் மனிதன்
– அப்துல் கையூம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related