போன்சாய் தெரிவுக்கான தொகுப்பு

P – 97

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

நெடுஞ்சாலை
இணைப்புத் திட்டம்

நாடெங்கும் விளம்பரம்
நாளிதழ் தம்பட்டம்

இட்ட அடி நோக
அடுத்த அடி கொப்பளிக்க

குண்டு குழி ரோட்டில்
குடு குடு மூதாட்டி

          – அப்துல் கையூம்

P – 98

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

பழுதடைந்த
மனித ஊர்தியின்
தலைமேட்டில்

ஏனிந்த
மைல் கல்..?

ஓஹோ ..
ஓடிய காலத்து
மைலேஜு கணக்கோ..?

          – அப்துல் கையூம்

P – 99

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

இந்தியன் நீ ..
இந்தியனாக இரு

படிச்சு படிச்சு சொன்னேன்

காதிலே வளையம்
கையிலே காப்பு

கழுத்திலே தொங்கும்
கனத்த சங்கிலி

சப்பாத்தி கள்ளியாய்
சாயம் பூசிய கேசம்

அடக் கருமமே ..
அப்பாச்சி இந்தியனாம்

          – அப்துல் கையூம்

P- 100

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

அவனை
சட்டத்தில்
மாட்டி வைக்க

ஆணித்தரமாய்
வாதாடும் வக்கீல்

சைலன்ஸ் ..
சைலன்ஸ்

நீதிபதி கையில்
சுத்தியல்

          – அப்துல் கையூம்

P – 101

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

பால் வீதியில்
பூமி பானை

மூன்றில் இருபங்கு
நீரைக் கலந்தது
அந்த பால்காரன்?

          – அப்துல் கையூம்

P – 102

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

கூடவேயிருந்து
குழிப் பறிப்பு

நாக்கையே
கடித்து விடும்

பொல்லாத
பல் நண்பன்

          – அப்துல் கையூம்

P – 103

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

பல்லி ஒன்று
பலன் சொன்னது

மேற்கே பார்த்தது
கிழக்கே பார்த்தது

கூரை மேலிருந்தே
குறி சொன்னது

சற்றே நொடியில்
சறுக்கி விழுந்தது

ஆருட மேதையின்
அரை வால் போனது

அதற்கு வரும்
ஆபத்தை அறியாமலே ..

          – அப்துல் கையூம்

P – 104

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

விஸ்… ஸ்

வீட்டுக்குள்
ஒரு காலிப்பயல்

விசிலடிக்கும்
குக்கர்

          – அப்துல் கையூம்

P – 105

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

சுமைதாங்கி கல்
என் பெற்றோர்கள்

மைல் கற்கள்
என் ஆசிரியர்கள்

வாழ்க்கையில்
வழவழப்பான
கூழாங் கற்கள்
என் நண்பர்கள்

கண்ணே ..
உன்னை
ராசிக்கல் என்றேன்

நீ இட்டதோ
என் தலையில்
பாறாங்கள்

          – அப்துல் கையூம்

P – 106

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

எட்டணா சைஸில்
ஸ்டிக்கர் பொட்டு

ஒட்ட மறந்த
இரவு நங்கை

காலண்டர்
காட்டுது
அமாவாசை

          – அப்துல் கையூம்

P-107

Posted in போன்சாய் on டிசம்பர் 8, 2007 by abdulqaiyum

எச்சில் நெசவு
உமிழ்நீர் கோலம்
கச்சிதப் பின்னல்
பூச்சிப் பொறி
பாழ்மனைத் தோரணம்
பாபிலோன் தொங்கு தோட்டம்
அதிசய நுட்பம்

கஜினிக்கே
பாடம் தந்த
சிலந்தி வலை   

          - அப்துல் கையூம்  

                                                                                               

P – 108

Posted in போன்சாய் on நவம்பர் 14, 2007 by abdulqaiyum

p-108.jpg 

எழுந்ததும்                                             எழாததுமாய்                                                                     

உச்சந் தலையில்                                                          கொண்டை போட்டு                                                            

குலுக்கி மினுக்கி                                                             குனிந்து நிமிர்ந்து 

கெண்டை ஏற                                                              தொண்டை கிழிய                                                                 

மச்சு மீது                                                                         உச்ச ஸ்தாயியில்                                                          

அப்படியென்ன ஒரு                                                           காட்டுக் கத்தல்?                                                             

நடையைப் பார் .. ..  

கதிரவனை எழுப்பிய                                                             கர்வ மிடுக்கோ?           

          – அப்துல் கையூம் 

P – 109

Posted in போன்சாய் on நவம்பர் 14, 2007 by abdulqaiyum

bharathi.jpg 

பாரதியே ..                                                     பார்த்தாயா..?                                                            பைந்தமிழில் உன்                                                            பாடலை படித்துவிட்டு                                             பாட்டெழுதுகிறானாம் 

“காணி நிலம் வேண்டாம்                                                        காணி நிலம் வேண்டாம்                                                            

என் காதலியின்                                                   தலையணையில்                                                                   கால் துண்டு                                                                               இடம் எனக்கு                                                                 போதும் காளி ..” என்று

          - அப்துல் கையூம்

P – 110

Posted in போன்சாய் on நவம்பர் 11, 2007 by abdulqaiyum
p-110.jpg 

என்னதான் கோளாறோ? 

இளமையிலேயே வழுக்கை 

இளநீருக்கு

          – அப்துல் கையூம்  

P – 112

Posted in போன்சாய் on நவம்பர் 11, 2007 by abdulqaiyum
p-112.jpg 

ஆகாயத்தில்

அன்ன விரயம்

வெள்ளித் தட்டை

வீசியெறிந்து

விண் முற்றம் முழுதும்

வெண் சோற்றுப்

பருக்கைகள்

ஓ விண்மீன்கள் ..

          – அப்துல் கையூம்

P – 113

Posted in போன்சாய் on நவம்பர் 11, 2007 by abdulqaiyum

p-113.jpg 

நறநற பற்கள்                                            

காவல் தெய்வம்                                                                       

பேண்ட் ஜிப்

          – அப்துல் கையூம்

P-114

Posted in போன்சாய் on நவம்பர் 10, 2007 by abdulqaiyum
 
 

தேன் நிலவு .. ..

தாம்பத்ய முகவுரை

இளமை சமர்ப்பணம்

காதற் பதிப்பு

கவர்ச்சி முகப்பு

அணிந்துரை இல்லா

கையடக்கப் பிரதி

அவள் … …

திறந்த புத்தகம்

இவன் … …

புத்தகப் புழு

          – அப்துல் கையூம்

P – 115

Posted in போன்சாய் on நவம்பர் 6, 2007 by abdulqaiyum

கலியுகம் .. ..

கழுத்திலே                                                                                                                        பெயர்

நினைவாற்றல்                                                                                                           கம்மி ?

          – அப்துல் கையூம்

P – 116

Posted in போன்சாய் on நவம்பர் 6, 2007 by abdulqaiyum
கருத்த நுரையீரல்
சிவப்பு குருதி
பச்சை பாடை
சாம்பல் அஸ்தி
நிறங்களை மாற்றும்
வெண் சுருட்டு
          – அப்துல் கையூம்

P – 117

Posted in போன்சாய் on நவம்பர் 6, 2007 by abdulqaiyum
p-117.jpg 
நெற்றிப் பட்டம்
பட்டுக் குஞ்சம்
பொன்னாடை போர்த்தி
மணி அலங்காரம்
          வேளா வேளைக்கு
          கவளச் சோறு
ஏ .. அங்குசக்காரா !
          திக்குத் தெரியாத காட்டில்
          தேடித் தேடி தினம்
          அம்மணமாய் ஓடி
          அலைந்து திரிந்தேனே
          அது எவ்வளவோ மேல்.
கயிறு பிளிறியது
காலிலே பாவம்
கனத்த சங்கிலி
          – அப்துல் கையூம்

P – 118

Posted in போன்சாய் on நவம்பர் 6, 2007 by abdulqaiyum
p-118.jpg 
எந்தப் புகைப்படச்சுருளை
இரவு பகல்
கழுவுகிறார்கள்
          இந்த
          நிழற்படக்
          கலைஞர்கள் ?
இருட்டறைக்குள்
துறு துறுவென்று
கருத்த வெளவாள்கள் .. ..
          அப்துல் கையூம்

P – 119

Posted in போன்சாய் on நவம்பர் 5, 2007 by abdulqaiyum
ஊடல் ..
பெண்ணின்
பொல்லாத ஆயுதம்
பலிகடாவானால்
பறந்திடும் ஊதியம்
ஆம்.. அரசு
அச்சடித்த காகிதம்
          அப்துல் கையூம்

P – 120

Posted in போன்சாய் on நவம்பர் 5, 2007 by abdulqaiyum
புரட்டிப் போட்டது
காண்டா மிருகம்.
மூக்கின் மேல் என்ன
அப்படியொரு கோபம் ?
மிருகமென
உனை அழைத்தது
நியாயம்தானோ ?
          அப்துல் கையூம்

P-121

Posted in போன்சாய் on நவம்பர் 5, 2007 by abdulqaiyum
p-121.jpg 
தேடலே வாழ்க்கை
வாழ்க்கையே தேடல்
          ஒரு சீதையின் தேடல்
          இராமாயாணம் ..
ஒரு சிலம்பின் தேடல்
சிலப்பதிகாரம் ..
          ஒரு கணையாழியின் தேடல்
          சாகுந்தலம்
ஆதி மனிதன்
கல்லைத் தேடி
வேட்டையாடினான்
          இன்று மனிதன்
          நிலவில் சென்று
          கல்லைத் தேடினான்
தேடலில்லா வாழ்க்கை
தேறாத வாழ்க்கை
          நேற்றைய தேடல்
          இன்றைய சொகுசு
இன்றைய தேடல்
நாளைய சேமிப்பு 
          – அப்துல் கையூம்

P – 122

Posted in போன்சாய் on நவம்பர் 3, 2007 by abdulqaiyum
p-122.jpg 
மீசை முளைத்தோரெலாம்
பாரதி என்றால்
எனக்கும் ஆசை
கவிதை வடித்திட
இப்படிக்கு,
பாசமுடன்
கரப்பான் பூச்சி.
          அப்துல் கையூம்

P – 123

Posted in போன்சாய் on நவம்பர் 3, 2007 by abdulqaiyum
செல்லரிக்கா ஏடுகளில்
பல்லவனார் வடித்த
சொல்லவொணா
சிற்பக் கவிதை
மகிமை சேர்
மாமல்லபுரம்
அது கடலோரக்
கற்காவியம்
          – அப்துல் கையூம்

P – 124

Posted in போன்சாய் on நவம்பர் 3, 2007 by abdulqaiyum
சத்துணவு
ஆயாவுக்கு
சொத்தையும்
சொள்ளையுமாய்
எலும்பும்
தோலுமாய்
இடுப்பிலொரு
பிள்ளை
          - அப்துல் கையூம்

P – 125

Posted in போன்சாய் on நவம்பர் 3, 2007 by abdulqaiyum
p-125.jpg 
அடித்ததோ
பேய்க்காற்று
          தலை விரித்து
          சாமி ஆடிய
பனை மரத்து
பாவைக்கு
          மரமேறி
          மந்திரித்து
இறுக்கமாய்
தாயத்து
           கழுத்திலே
          கள்ளுப் பானை
- அப்துல் கையூம்

P – 127

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
p-127.jpg 
சீ..ச்..சீ
டெய்லரா அவன்..?
          சட்டைப்பை இல்லாமல்
          சட்டையா..?
சண்டையிட
கிளம்பினேன்.
          போகட்டும் கழுதை ..
இருந்தால் மட்டும்
என்னதான் வாழுதாம் ..? 
          அப்துல் கையூம்

P – 128

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
வகுப்புக்கு மட்டம்
கையிலே கவண்எறி
இளமையில் கல்
          அப்துல் கையூம்

P – 129

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
தேசிய நீரோட்டம்
பேசியே களைத்தோம்
          நதிகளுக்கு ஏன்
          நாட்டாமை ..?
காவிரிக்கு போதும்
கட்டப் பஞ்சாயத்து
          தஞ்சைத் தரணியில்
          தவமாய்த் தவமிருந்து
நம்பியே அதனை
கும்பி காய்பவனும்
          இந்தியப் பிரஜைதான்
          இந்தியனே ..
அப்துல் கையூம்

P – 130

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
p-130.jpg 
கணினி
          அறிவியலின்
          வளர்ப்புப் பிள்ளை
எடுப்பார்
கைப்பிள்ளை
          இனி இவனில்லாமல்
          எதுவும் இல்லை
அப்துல் கையூம்

P-131

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
p-131.jpg 
இருட்டறைக்குள்
ஏன் முடக்கம் ..?
          உனக்கு
          பால்குடி
          பருவத்திலிருந்தே
பயத்தை ஊட்டி வளர்த்த
பெற்றோர்கள் யார்..?
          பதில் சொல்
          வெளவாலே ..
அப்துல் கையூம்

P – 132

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
p-132.jpg 
தேசப்பிதாவே ..
தீர்க்கதரிசி நீ ..!
          கையில் .. ..
          குச்சியை ஏந்திய
          சிதம்பர ரகசியம்
சிலையானபின்தான்
சிந்தையில் படுகிறது
          பட்சிகள் பறந்தன
          எச்சமிட அச்சம்
அப்துல் கையூம்

P – 133

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
வீணைக் கச்சேரி
          விரக்தியில்
          வெளியேறும்
          ரசிகர் கூட்டம்
நரம்புத் தளர்ச்சி
          வீணைக்கா ?
          வித்வானுக்கா ?
விவரம்
தெரியவில்லை
          அப்துல் கையூம்

P – 134

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
மயிலுக்குப்
போர்வை
பேகன்
          நிலவுக்கு
          மேகம்
          ஏகன்
அப்துல் கையூம்

P – 135

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
துயில் விடு தூது
கொட்டாவி
          உறக்கத்தின்
          உறுதிமொழி ?
வேறென்ன நண்பா
குறட்டைதான் ..!
அப்துல் கையூம்

P – 136

Posted in போன்சாய் on அக்டோபர் 31, 2007 by abdulqaiyum
துருவிப் பார்த்தேன்
மார்க்கட் நிலவரம்
தேங்காய்
விலையேற்றம்
அப்துல் கையூம்

P – 137

Posted in போன்சாய் on அக்டோபர் 26, 2007 by abdulqaiyum
கேள்விக்குறிகளே ..!
          ஒற்றைக் காலில்
          ஏனிந்த வேள்வி..?
வினாக்களின் பாரத்தில்
வில்லாய் வளைந்தீரோ..?
          குனிந்து தேடுவது
          விடைகளையா..?
வினாக்களுக்கேது
முற்றுப் புள்ளி ..?
          அதைத்தான்
          போட்டு மிதித்து
          ஏறி நின்று விட்டீரே..?
அப்துல் கையூம்

P – 138

Posted in போன்சாய் on அக்டோபர் 26, 2007 by abdulqaiyum
p-138.jpg 

காபி என்பதா ..?

காப்பி என்பதா…?

காஃபி என்பதா ..?

“குளம்பியே” விட்டேன்.. !

          – அப்துல் கையூம்